Discoverஎழுநாபெருந்தோட்டத் தமிழ்மக்களின் சமூக அபிவிருத்திக்கு உந்துதல் அளிக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்குதல் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் முத்துவடிவு சின்னத்தம்பி
பெருந்தோட்டத் தமிழ்மக்களின் சமூக அபிவிருத்திக்கு உந்துதல் அளிக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்குதல் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் முத்துவடிவு சின்னத்தம்பி

பெருந்தோட்டத் தமிழ்மக்களின் சமூக அபிவிருத்திக்கு உந்துதல் அளிக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்குதல் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் முத்துவடிவு சின்னத்தம்பி

Update: 2022-08-13
Share

Description

இலங்கையின் பெருந்தோட்டச் சமூகமானது நிறைவேற்றப்படாத பல மனிதத்தேவைகளையும், தரங்குன்றிய ஒரு வாழ்க்கைமுறையையும் கொண்டதாக சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்துள்ளது. நாட்டின் ஏனைய சமூகங்களிலிருந்து இச்சமூகத்தை தனிமைப்படுத்திவைத்த பல்வேறு வரலாற்று ரீதியான காரணங்களினாலேயே அது இந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

தோட்டமக்களின் சமூகஅபிவிருத்திக்கும் சமூகஅணிதிரட்டலுக்கும் பங்களிக்கும் இன்னொரு முக்கிய குழுவினர் உள்நாட்டு – வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களாகும்.

சமூக அணிதிரட்டலுக்கு ஒரு சமூகத்தில் உள்வாரியானதும் வெளிவாரியானதுமான இருவிதமான காரணிகள் பிரச்சினைகளை உருவாக்கலாம்.

தோட்டங்களிலே காணப்படும் இறுக்கமானதும், படிமுறையானதுமான முகாமை அமைப்பு ஆரம்பகாலந்தொட்டே தோட்டமக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்துள்ளது.

பெருந்தோட்டங்களின் ஆரம்பகாலங்களில் காலனித்துவ ஆட்சியும், அதனைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக உற்பத்தியை மையமாகக்கொண்ட ஒரு அமைப்பில் தனித்துவமான ஒரு கலாசாரத்தைக் கொண்டதும், மூடியதுமான அவர்களது வாழ்க்கைமுறையும் அவர்களது மனப்பாங்குகளில் பெரும் செல்வாக்கு செலுத்தின. இம்மக்களிடையே அர்த்தமுள்ள சமூக அபிவிருத்தி ஏற்படவேண்டுமாயின் இந்த மனப்பாங்குகளில் மாற்றங்கள் ஏற்படுவது இன்றியமையாததாகும்.

பெருந்தோட்டமக்களின் சமூக அபிவிருத்திக்கு வரையறைகளை அல்லது தடைகளை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகளை இனங்கண்டு, அவற்றை அகற்றி அல்லது வலுவிழக்கச்செய்து அம்மக்களின் சமூகஅபிவிருத்திக்கு உந்துதல் அளிக்கக் கூடிய ஒரு சமூக – கலாசார – பொருளாதார சூழலை உருவாக்குவதே அம்மக்களிடையே சமூக அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான சிறந்த வழியாகும்

#realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம்  #தோட்டத்தொழிலாளர்கள் #மலையகப்பெண்கள்  #தேயிலைத்தோட்டம்  #1000ரூபாசம்பளம்

Comments 
In Channel
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

Ezhuna